குடும்பத்தில் யாருக்காவது கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்யணும்? மற்றவர்க்கு பரவாமல் தடுப்பது எப்படி?

கோவிட்-19 பரவி வரும் வேகத்தை பார்த்தால் எல்லோருக்கும் பயமாகத்தான் இருந்து வருகிறது. இது குறித்து ஒவ்வொரு குடும்பங்களும் பயந்து தான் வருகிறார்கள். குறிப்பாக நோயெதிரிப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், வயதானவர்கள் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். இப்படி இருக்கும் நிலையில் நம் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது. கண்டிப்பாக இது நமக்கு கவலைத்தான் அளிக்கும். ஆனால் நீங்கள் கவலைப்படுவதினாலயோ அல்லது பயப்படுவதினாலயோ எதுவும் மாறாது. முதலில் நிலைமையை புரிந்து கொண்டு அதற்கேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.

​நோய்க்கட்டுப்பாடு
இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட அனைவருமே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கோவிட் 19 ன் லேசான அறிகுறிகளைக் கொண்டு இருப்பவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த அரசாங்கம் அனுமதித்து உள்ளது. ஏனென்றால் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) படி, இந்த நோயாளிகளில் பெரும்பாலோர் மருத்துவ உதவி இல்லாமல் குணமடைய முடியும். சரியான உதவி மற்றும் முன்னெச்சரிக்கையின்மை காரணமாக மோசமடைந்த வழக்குகள் நிறைய உள்ளன. எனவே பாதிக்கப்பட்ட நோயாளிக்கு தக்க சமயத்தில் சரியான உதவியையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கொடுக்க வேண்டும்.

​தொற்று அதிகரிக்க என்ன காரணம்

நீங்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால் தொற்றை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு அருகிலேயே நீங்கள் இருந்தால் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் தான் கொரோனா வைரஸ் வழக்குகளில் அதிகமான உயர்வு ஏற்பட இதுவும் ஒரு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உங்க குடும்பத்தில் ஒருவர் கோவிட் 19 நோயாளியாக இருந்தால் கீழ்க்கண்ட 8 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.

​தனிமைப்படுத்துதல்

உங்க குடும்பத்தில் யாராவது கோவிட் 19 அறிகுறிகளை காட்ட ஆரம்பித்தால் உடனே அவரை தனிமைப்படுத்த முற்படுங்கள். அறிகுறிகள் லேசாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனிமைப்படுத்துதல் அவசியம். ஆனால் அதே நேரத்தில் நோயாளியின் மனநிலையையும் நீங்கள் யோசிக்க வேண்டும். ஏனெனில் தனிமையை கையாள்வது எல்லாருக்கும் சிக்கலான ஒன்று. எனவே நோயாளியுடன் வீடியோ அழைப்பில் பேசுவது, ஆன்லைன் கேம்களில் விளையாடுவதன் மூலம் நோயாளியுடன் நீங்கள் தொடர்ந்து இணைப்பில் இருக்க முடியும். இதன் மூலம் உணர்ச்சி ரீதியாக அவரை நீங்கள் ஆதரிக்க முடியும்.

​நோயாளிக்கு வேண்டியவற்றை செய்ய ஒரு நபர்

நோயாளியை கவனித்துக் கொள்ளக் கூடிய மற்றும் நல்ல நோயெதிரிப்பு சக்தியை கொண்ட ஒரு நபரை மட்டும் தேர்வு செய்யுங்கள். அதே மாதிரி அவரை பராமரிக்கும் நபரும் குடும்பத்தில் இருந்து தனிமையில் இருக்க வேண்டும். ஏனெனில் பராமரிப்பாளர் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவர் அவ்வாறு இருப்பது மற்றவர்க்கு நோய் பரவாமல் இருக்க உதவும்.

நோயாளிக்கு முடிந்த வரை பயன்படுத்தி விட்டு தூர எறியும் பாத்திரங்களை பயன்படுத்துங்கள்

ஒரே சமையலறையில் நோயாளிக்கு பயன்படுத்தும் பாத்திரங்களையும், குடும்பத்திற்கு பயன்படுத்தும் பாத்திரங்களையும் வைத்து உபயோகப்படுத்தினால் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்த வரை நோயாளியின் பாத்திரங்களை தனியாக போட்டு கழுவி சுத்தம் செய்யுங்கள்.

​கையுறைகள்

நோயாளி பயன்படுத்திய பொருட்களை அப்புறப்படுத்த சரியான கையுறைகளை பயன்படுத்துங்கள்.

நோயாளி பயன்படுத்திய பொருட்கள் அல்லது அவருடைய அறையில் எதையாவது நீங்கள் தொடுகிறீர்கள் என்றால் தொற்றுக்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே பொருட்களை கிருமி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் கையுறைகளை பயன்படுத்தி செய்யுங்கள்.

பாதிக்கப்பட்டவருடன் குளியலறையை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

குளியலறைகள் தான் வீட்டிலேயே மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடமாகும். இங்கு தான் கோவிட் 19 தொற்று அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளது. எனவே நோயாளிக்கும் குடும்பத்தில் உள்ளவருக்கும் தனித்தனி குளியலறைகள் இருப்பது நல்லது.

​வயதானவர்கள் மேல் அதிக கவனத்தில் இருங்கள்.

SARS-CoV-2 க்கு வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே உங்க வீட்டில் இருக்கும் பெரியவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் கோவிட் 19 இல்லாத பகுதிக்கு அவர்களை அனுப்பி வையுங்கள். அவர் இருக்கும் இடம் கொரோனா வைரஸ் இல்லாத இடமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை தினமும் கிருமி நீக்கம் செய்யுங்கள். சோடியம் ஹைபோகுளோரைட்டை 1:10 (1 பகுதி சோடியம் ஹைபோகுளோரைட் மற்றும் 10 பாகங்கள் நீர்) என்ற விகிதத்தில் நீர்த்துப்போகச் செய்து நோயாளியின் அறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் தெளிக்கவும். வாஷ் ரூம்களிலும் கிருமி நீக்கம் செய்ய நீங்கள் இதைப் பயன்படுத்தலாம். கரைசலை தெளிக்கும் போது நீங்கள் சரியான கையுறைகளை அணிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் இந்த கரைசல் உங்கள் மீது தெறித்தால் தடிப்புகளைத் தரும் என்றும் அவர் கூறுகிறார்.

இது தவிர நீரேற்றத்துடன் இருப்பது, விட்டமின் சி அடங்கிய எலும்பிச்சை சாறு இவற்றை உட்கொள்வது, நல்ல தூக்கம் போன்றவை உங்க உடம்பை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும்.

மேற்கண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் உங்களையும் உங்க அன்புக்குரியவரையும் எவ்வாறு காப்பாற்றலாம் என்பதற்கு உதவியாக இருக்கும். கோவிட் 19 யை கட்டுப்படுத்துவது கடினமான ஒன்றல்ல. நம் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இது பரவுதலை நம்மால் கட்டுப்படுத்த முடியும். எனவே சுகாதார அமைப்புகள் கூறும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்றுங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே