என்னம்மா, இப்படி பிறந்தமேனியா போட்டோ போடுறீங்களேமா?: மீரா மிதுனை விளாசும் நெட்டிசன்ஸ்.

பெண்கள் முன்னேற்றத்திற்கும் நீங்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு என்ன சம்பந்தம் மீரா மிதுன் என்று சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மீரா மிதுன் தமிழகத்தை விட்டு வெளியேறி மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். தமிழகத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும், பலர் தன்னை துரத்துவதாகவும் அவர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
மும்பையில் செட்டில் ஆனாலும் தமிழகத்தின் மீது அக்கறை இருக்கிறது. நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடு தான். செத்தாலும் தமிழ்நாட்டில் தான் சாவேன் என்று மீரா கூறியுள்ளார். அரசியலுக்கு வரும் ஐடியாவிலும் இருக்கிறார் மீரா.

தமிழகத்தில் தன்னை துரத்தியதால் தான் மும்பையில் தங்கி பாலிவுட், ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம். இந்நிலையில் பெண்கள் முன்னேற்றம் பற்றி ட்வீட் செய்துள்ள மீரா மிதுன் தான் ஆடையில்லாமல் நகைகள் மட்டுமே அணிந்து, உடலில் பெயிண்ட் அடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை மென்ஷன் செய்துள்ளார்.
மீரா மிதுனின் ட்வீட்டை பார்த்த அவரின் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

தமிழகத்திற்கு தில்லான பிரதிநிதி தேவைப்படுகிறது. தயவு செய்து எங்கள் மீரா மிதுனை நியமிக்கவும் பிரதமர் அவர்களே. மீரா, உங்களின் கோரிக்கை நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் என்று தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,

பெண்கள் முன்னேற்றத்தை பற்றி நீங்கள் பேசக் கூடாது. நீங்கள் செய்யும் காரியங்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவாது. மீரா மிதுன் மேக்கப் போடாமல் இருந்தபோது எடுத்த புகைப்படம் போன்று. பியூட்டி பார்லரை மூடிவிட்டதால் மீரா மிதுன் இப்படி ஆகிவிட்டார். தயவு செய்து இந்த ட்வீட்டை நீக்கிவிடவும், பார்க்க முடியவில்லை. அது என்ன எதற்கெடுத்தாலும் மோடியின் ட்விட்டர் கணக்கை மென்ஷன் செய்கிறீர்கள்?. ஏன் இப்படி ட்வீட் போட்டு எங்களை எல்லாம் கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
முன்னதாக மீரா மிதுன் ரஜினிகாந்தை கன்னடர் என்றும், தளபதி விஜய்யை கிறிஸ்தவர் என்று கூறி ட்வீட் செய்தார். அதை பார்த்து ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மீரா மிது செம கடுப்பில் இருக்கிறார்கள்.

மீரா மும்பையில் செட்டில் ஆனதில் இருந்து தனது கவர்ச்சி மற்றும் படுகவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களை பார்த்து பலரும் படுமோசமாக கமெண்ட் அடிக்கிறார்கள். சில நேரங்களில் மீரா பதிலுக்கு கமெண்ட் போடுகிறார். தமிழ் கலாச்சாரத்தை பற்றி பெருமையாக பேசும் தான் இப்படி கவர்ச்சியாக உடை அணிவதற்கு காரணம் ஃபேஷன் துறை என்கிறார் மீரா.

தான் ஒரு சூப்பர் மாடல் என்பதால் சர்வதேச லெவலுக்கு சென்ற பிறகு உடை இப்படித் தான் இருக்கும் என்கிறார் மீரா. உடை சரி, பீர் குடிப்பதை எல்லாம் சமூக வலைதளத்தில் வெளியிடலாமா என்று பேட்டி ஒன்றில் மீராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, பீர் மதுவே இல்லை. சொல்லப் போனால் பீர் குடிப்பது இதயத்திற்கு நல்லது என்று விஞ்ஞானிகளே தெரிவித்துள்ளனர். பீர் குடிப்பதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். பீர் குடித்துக் கொண்டு சமூக வலைதளத்தில் நடிக்க விரும்பவில்லை. பீர் குடிப்பது உடல்நலத்திற்கு நல்லது என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே