மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா கோரிக்கை

மேற்கு வங்கத்தில் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை மத்திய அரசு மீண்டும் தொடங்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பேருந்து, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். சில மாநிலங்களில் பேருந்து சேவைகள் மட்டும் மீண்டும் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குமாறு மத்திய அரசுக்கு மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார நடவடிக்கைகளுடன் ரயில் சேவைகளை தொடங்கலாம் என்றும் வலியுறுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக மாநில உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ சேவைகளை தொடங்க அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை, அகமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு விமான சேவைகள் கடந்த ஜூலை 6ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டன.

தற்போது செப்டம்பர் 1ம் தேதி முதல் அதனை மீண்டும் தொடங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே