ரஜினியுடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய அரசியல் ஆவல்..!!

ரஜினிகாந்தின் அறிவிப்பை ஒரு நலம்விரும்பியாக நான் ஆதரிக்கிறேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு. 

ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்ற அறிவிப்பை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், என்னுடைய இனிய நண்பர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்த முடிவினை அவருடைய நலம் விரும்பி என்ற முறையில் நான் வரவேற்கிறேன்.

ரஜினிகாந்த் ஒரு தார்மீக சக்தியாக விளங்கியவர், விளங்குபவர், விளங்குவார் என்பதில் எனக்கு ஐயமில்லை. 1996-ஆம் ஆண்டைப் பல முறை நினைத்துப் பார்த்து நான் மகிழ்ச்சியடைபவன். 2021-ஆண்டையும், அதற்குப் பிறகு 2024-ஆம் ஆண்டையும் நான் எதிர் நோக்குகிறேன். 

அவற்றில் ரஜினிகாந்த் அவர்களுடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய அரசியல் ஆவல்.

ரஜினிகாந்த் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்க என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே