BREAKING NEWS : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் நின்றால் மட்டுமே வழக்கை விசாரிப்போம்! – உச்சநீதிமன்றம்

டெல்லியில் போலீசால் நேற்று கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் கலவரம் முடிந்தால் மட்டுமே முழு விசாரணை நடக்கும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தெரிவித்துள்ளார்.

இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தலைமை நீதிபதி அமர்வானது வழக்கை விசாரிப்பதற்காக அமர்ந்தது.

அப்போது மூத்த வழக்கறிஞரான இந்திரா ஜெய்சிங் மற்றும் சில வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி அமர்வில் சில முறையீட்டை வைத்தார்கள்.

குறிப்பாக முதலில் அளிகர் மாணவர்கள் மீது வன்முறை கட்டப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் மேலும் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது காவல்துறை வன்முறை தாக்குதல்களை வைத்து விடுகிறார்கள்.

எனவே இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் காவல்துறை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதே கோரிக்கையுடன் தான் வேறு சில வழக்கறிஞர்கள் ஜாமியா பல்கலைக்கழகத்திலும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்தியவர்கள் மீது போலீசார் வன்முறை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

பல மாணவர்கள் பலத்த காயம் அடைந்து இருக்கிறார்கள். சில மாணவர்களை காணவில்லை.

அவர்களை கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும், இந்த வழக்கை தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே வழக்கை தாமாக முன் வந்து பதிய முடியாது; இன்று அவசரமாக விசாரிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

தலைமை நீதிபதி கூறியதாவது, சட்ட ஒழுங்கை பாதுகாக்கவே போலீஸ் உள்ளது. டெல்லியில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். யார் கலவரம் செய்தது, யார் அமைதியாக போராடியது என்று இப்போது சொல்ல முடியாது.

போராட்டம் என்று பொதுச் சொத்துக்களை சேதப்படுத்த கூடாது. வன்முறை போராட்டங்களை அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை. பேருந்துகளை கொளுத்தியது மிகப்பெரிய தவறு.

நாட்டில் ஏற்கனவே நிறைய கலவரம் நடக்கிறது.

டெல்லியிலும் அதேபோல் நடக்க வேண்டாம். கலவரம் எப்படி முடியும், என்ன நடக்கும் என்று எங்களுக்கு தெரியும். கற்களை வைத்து மாறி மாறி தாக்கி இருக்கிறார்கள்.

கலவரம் நின்றால் மட்டுமே வழக்கை விசாரிப்பேன். மனுதாக்கல் செய்யுங்கள், நாளை விசாரிக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே