சிம்புவுக்கு திருமணம் – மணப்பெண் இவங்க தான் – நடிகர் VTV கணேஷ் வெளியிட்ட தகவல்..!

இயக்குநர் சுந்தர் சி-யின் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ திரைப்படத்தில் நடித்திருந்த சிம்பு தற்போது ‘மாநாடு’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனை வெங்கட் பிரபு இயக்க, அரசியல் களத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது.

இதற்கிடையே வரும் ஆகஸ்டில் சிம்புவின் திருமணம் நடக்கவிருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெருங்கிய சொந்தக்காரப் பெண்ணை சிம்புவுக்கு துணையாக தேர்ந்தெடுத்திருக்கிறாராம் அவரது தாய் உஷா. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


இந்நிலையில், நடிகர் VTV கணேஷ் சமீபத்தில் பிரபல வலைத்தளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் சிம்புவுக்கு விரைவில் திருமணம். சீக்கிரமே அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளார்.

Related Tags :

Simbhu| VTVGanesh

Sri Mahat

ENJOY EVERY MOMENT..

Sri Mahat has 140 posts and counting. See all posts by Sri Mahat

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே