#ஆரம்பிக்கலாங்களா : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியானது!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் ‘விக்ரம்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசனின் 66-வது பிறந்த நாள் இன்று.

இதை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமலஹாசன் நடித்துக்கொண்டிருக்கும் விக்ரம் படத்தின் டீரை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“அன்புள்ள குரு.. இது உங்களுக்கு எங்களில் தாழ்மையான பரிசு. பிறந்த நாள் வாழ்த்துக்கள். எப்போதும் எங்களுக்கு உத்வேகம் கொடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டு டீசரை வெளியிட்டிருந்தார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கமலஹாசன் தயாரிக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படதொகுப்பு செய்கிறார்.

டீசரில், “டீஸர்னா இது டீஸர். ஆரம்பிக்கலாங்களா” என்ற வசனத்தைப் பேசிய கமலஹாசன் எதிரில் இருக்கும் யார் மீதோ இரு கத்திகளைத் தூக்கி எறிகிறார்.

இந்த டீசரை கமல்ஹாசனும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் எனது படத்தின் டீஸரை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து பேட்டை படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே