எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR)’. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது.
இந்நிலையில் தற்போது ராஜமௌலியின் RRR படத்தில் விஜய்யின் அழகிய தமிழ் மகன் உட்பட பல படங்களில் நடித்த பிரபல நடிகையான ஸ்ரேயா இணைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்ரேயா தான் RRR படத்தில் நடிக்கவுள்ளதாகவும், படப்பிடிப்புகள் ஆரம்பித்ததும் இந்தியா வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் அஜய் தேவ்கனுக்கு வரும் பிளாஷ்பேக்கில் அவருக்கு மனைவியாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே அஜய் தேவ்கனுடன் ‘திரிஷ்யம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தது குறிப்பிடத்தக்கது.