‘காட்டேரி’ நேரடி ஓடிடி ரிலீஸ்! யாமிருக்க பயமே இயக்குனரின் அடுத்த பட அப்டேட்.

வைபவ் நடிப்பில் இயக்குனர் டிகேவின் அடுத்த படம் காட்டேரி நேரடியா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கடந்த பல மாதங்களாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் எந்த புதிய திரைப்படங்களையும் ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை தான் உள்ளது. பல கோடி ருபாய் முதலீட்டில் தயாராகி ரிலீசுக்கு ரெடியாக உள்ள படங்களை கூட வெளியிடமுடியாத சூழ்நிலை தான் உள்ளது. அதனால் தயாரிப்பாளர்கள் அதிக நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் திரையரங்குகள் வெளியாக வாய்ப்பு உள்ளது என சினிமா துறையினர் எதிர்பார்த்து இருந்த நிலையில் நேற்று பேட்டி அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு அதற்கு வாய்ப்பு இல்லலை என கூறி இருந்தார்.

தொற்று எண்ணிக்கை முழுமையாக குறைந்து மக்கள் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் தான் தியேட்டர்கள் திறக்கப்பட சாத்தியம் உள்ளது. தற்போதைக்கு தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றிற்கு எந்த தளர்வும் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் கூறி இருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து நஷ்டத்தை தவிர்க்க பல திரைப்படங்கள் தற்போது நேரடியாக ஓடிடி இணையத்தளத்தில் வெளியாக தயாராகி வருகின்றன. ஏற்கனவே சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் படம் ஆகியவை ஓடிடியில் வெளிவந்து இருந்த நிலையில் தற்போது அடுத்து யாமிருக்க பயமே பட புகழ் இயக்குனர் டிகே இயக்கி உள்ள காட்டேரி படமும் நேரடியாக ஓடிடி இணையத்தளத்தில் வெளிவர உள்ளதாக அறிவித்துள்ளனர்.

யாமிருக்க பயமே படம் மிகப்பெரிய ஹிட் என்பதால் காட்டேரி படம் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதன் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு போடப்பட்டு விட்டது. ஏப்ரல் 17-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த படம் வெளியாகவில்லை.
மேலும் மூன்று மாதங்களை கடந்தும் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட எத்தனை மாதங்கள் ஆகும் என்பது தெளிவாக தெரியாத நிலையில் தான் நேரடியாக ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் முடிவெடுத்து உள்ளார்.

இந்த படத்தில் வைபவ், கருணாகரன், சோனம் பாஜ்வா, வரலக்ஷ்மி சரத்குமார், ஆத்மீகா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்தின் தலைப்பை பார்க்கும் போதே தெரிந்திருக்கும் இது பேய் படம் தான் என்று. யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஏகிய படங்களுக்கு பிறகு டீகே இயக்கி உள்ள படம் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 2018ல் அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் சென்ற வருடமே முடிக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராக இருந்தது.

ஆனால் ஒரு வருடத்திற்கும் மேலாக வெளியாகமேலேயே இருந்தது. தற்போது அது OTTயில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு முன்பு இயக்குனர் அளித்த பேட்டியில் இந்த படம் ஹாரர் காமெடி படமாக இருக்கும் என தெரிவித்து இருந்தார். அது மட்டுமின்றி இந்த படத்தில் நடித்துள்ள நான்கு ஹீரோயின்களுக்கு மிக சாலிட் ரோல் வழங்கப்பட்டு உள்ளது என்றும் கூறி உள்ளார். வைபவ் ஜோடியாக சோனம் பாஜ்வா நடித்து உள்ளார். மற்ற நடிகைகளுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஹாரர் காமெடி கதை குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்கும் என டீகே கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே