உத்தரகாண்ட் – புதிய முதலமைச்சர் திரத் சிங் ராவத் தேர்வு..!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த தீரத் சிங் ராவத் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

உத்தரகாண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.

இதனையெடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணியில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்து.

உத்தரகாண்ட் முதலமைச்சராக செயல்பட்டு வந்த திரிவேந்திர சிங்யுடன் இணைந்து செயல்படுவதில் இணக்கமாக இல்லை என்று அவரது சக அமைச்சர்கள் மற்றும் கட்சி எம்எல்ஏக்கள் டெல்லி பாஜக மேலிடத்திடம் புகார் அளித்தனர்.

இதனால் நேற்று இரவு முதலமைச்சர் பதவியில் இருந்து திரிவேந்திர சிங் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இன்று பாஜக சார்பில் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் உத்தரகாணட் சென்றிருந்தார்.

டேராடூனில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக எம்எல்ஏக்கள் முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வுச் செய்யப்பட்டார்.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு உத்தரகாண்ட் பாஜக மாநில தலைவராக இருந்தார். அம்மாநில சட்டமன்ற உறுப்பினராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தார்.

தற்போது மாநில நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தீரத் சிங் ராவத் தற்போது உத்தரகாண்ட் முதல்வராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே