இறைச்சி, மீன் மார்க்கெட்டில் கட்டுக்கடங்காத கூட்டம்.. காற்றில் பறக்க விடப்பட்ட விதிமுறைகள்..!!

நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க இன்றே கூட்டம் அலைமோதியது.

கொரோனா காரணமாக, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக, அசைவ பிரியர்கள் இன்றே மீன்கள் வாங்க காசிமேட்டில் குவிந்தனர்.

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், பைபர் மற்றும் நாட்டு படகுகள் மூலம் பிடிக்கப்பட்ட மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. சந்தைக்கு வந்த மக்கள், கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக செயல்பட்டனர்.

இதேபோன்று, சிந்தாதிரிப்பேட்டை, பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்களிலும் ஏராளாமனோர் வந்து மீன்கள் வாங்கிச் சென்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே