12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் மூலம் குழுக்கள் அமைத்து மாணவர்களுக்கு வினாத்தாள்களை அனுப்பி விடைகளைப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளது.
அதில், வாட்ஸ் ஆப் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியே குழுக்களை உருவாக்க வேண்டும்.
வாட்ஸ் ஆப் குழுவில் வினாத்தாள் அனுப்ப வேண்டும்,
விடைத்தாளில் பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
வாட்ஸ் ஆப் குழுவின் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், விடியோக்களை பதிவிடக் கூடாது.
ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் ஆப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.