கன்னியாகுமரி சுசிந்திரத்தில் வீடு வீடாக சென்று அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் “வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்” என்ற பெயரில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி மத்திய அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார்.

சட்ட மன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாகர்கோவில் வந்துள்ளார்.

திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்துக்கு வந்த அவருக்கு பாஜகவினர் செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அங்கிருந்து சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலுக்குச் சென்று அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து “வெற்றிக் கொடி ஏந்தி வெல்வோம்” என்ற பெயரில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பொன். ராஷாகிருஷ்ணனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

சுசீந்திரத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நாகர்கோவில் இந்துக் கல்லூரி பகுதியிலிருந்து திறந்தவெளி வாகனத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அமித்ஷாவின் வருகையை ஒட்டி, நாகர்கோவில் மற்றும் சுசீந்திரம் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே