கொரோனா ஊரடங்கில் வேலை இழந்த ஐ.டி பெண் ஊழியர் உட்பட இருவர் தற்கொலை

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம், தேவராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் காஞ்சனா (24).

இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வருந்தார்.

ஆனால் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த ஆறு மாதமாக காஞ்சனா வேலை இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இஎம்ஐ உள்ளிட்ட காரணங்களால் அவர் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து யோசித்துக்கொண்டே காஞ்சனா மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் அவர் வீட்டில் கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல் பட்டாபிராம், சத்திரம் பகுதியை சேர்ந்த 29 வயதான பெண்டர் பால்ராஜும் தற்கொலை செய்துக்கொண்டார்.

ஊரடங்கு காரணமாக கடந்த 5,6 மாதங்களாக வேலையில்லாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து மனமுடைந்த காணப்பட்ட பால்ராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒரே பகுதியில் ஐ.டி.பெண் ஊழியர் உட்பட அடுத்தடுத்து இருவர் ஊரடங்கால் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே