கொரோனாவுக்கு பலியான இரட்டையர்கள்..!!

உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 வயதான இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரேமண்ட் ரபேல் – சோஜா தம்பதிக்கு கடந்த 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.

ஜோஃப்ரெட் வர்கீஸ் கிரிகோரி (Joefred Varghese Gregory) மற்றும் ரால்பிரட் ஜார்ஜ் கிரிகோரி (Ralfred George Gregory) என பெயர் கொண்ட அந்த மாற்றான் சகோதரர்கள் இருவரும் ஒரே மாதிரியாக கணினி பொறியியல் படித்துவிட்டு, ஹைதராபாத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 24-ம் தேதி ஒரே நாளில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரட்டையர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே