டிரம்பின் நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக புறந்தள்ளும் மிஷெல் ஒபாமா, டொனால்ட் டிரம்ப் ஒரு திறமையற்ற அதிபர், ஈவு இரக்கமற்றவர் என்று சாடியுள்ளார்.
அமெரிக்க ஜனநாயக கன்வென்ஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, ஜோ பிடனை ஆதரித்துப் பேசினார்.
அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொண்ட மிஷெல் ஒபாமா, எப்போதெல்லாம் நாம் வெள்ளை மாளிகையை நோக்கி தலைமை அல்லது ஆறுதல் அல்லது ஒருங்கிணைந்த நிலைத்தன்மை போன்றவற்றை எதிர்நோக்கும் போதெல்லாம், நமக்கு அதற்கு மாற்றாகக் கிடைப்பது என்னமோ குழப்பம், பிரிவினை மற்றும் மனிதநேயமற்ற செயல்தான்.
மிகவும் நேர்மையாகவும், உறுதியாகவும் என்னால் ஒன்றைச் சொல்ல முடியும், டொனால்ட் டிரம்ப், நாட்டின் தவறான அதிபர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.