திருச்சி: ஜவுளிக்கடையில் ‘ஜஃபிரா’ எனும் பிரத்யேக பெண் ரோபோ பயன்பாடு

திருச்சியில் செயல்படும் ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்களின் உடல்வெப்பநிலையை அறியவும், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்யவும், கடைக்கு எத்தனை பேர் வந்துள்ளனர் என்பதை அறியவும் ‘ஜஃபிரா’ எனும் பெண் ரோபோவை பயன்படுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி ,இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், திருச்சியில் செயல்படும் ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்களின் உடல்வெப்பநிலையை அறியவும், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்யவும், கடைக்கு எத்தனை பேர் வந்துள்ளனர் என்பதை அறியவும் ஜஃபிரா எனும் பெண் ரோபோவை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

செய்தி ஒருங்கிணைப்பாளர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே