கோவை மாநகராட்சி ஆணையர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைமை செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் ஜடாவத் வேளாண்மைத்துறை துணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர், கோவை மாநகராட்சி பள்ளிகளில் மூன்றாம் மொழி குறித்த பிரச்சினையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் குமரவேல் பாண்டியன், கோவை மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இதேபோல், பழனி கோவில் நிர்வாக அதிகாரி ஜெயசந்திரபானு ரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே