முழு ஊரடங்கு நாட்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது – தெற்கு ரயில்வே

ஏப்ரல் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ரயில் முன்பதிவு மையங்களை இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அமலில் இருக்கும் இரவு 10 மணி முல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஞாயிறு தோறும் முழு பொதுமுடக்கம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ரயில் முன்பதிவு மையங்களை இயங்காது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகள் ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்யலாம் என்றும்; முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பதற்கான மையங்கள் செய்லபடும் என்றும் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே