பீலா ராஜேஷ் பணி இடமாற்றத்திற்கான காரணம் இந்த பேட்டி தான்

தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் மறுபடியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி தான் பீலா ராஜேஷ் பணியிட மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

அந்த செய்தி கட்டுரையில், சென்னையில் மட்டும் சுமார் 236 கொரோனா மரணங்கள் அரசின் கவனத்திற்கு வரவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதற்கு சில ஆதாரங்களையும் அந்த கட்டுரையில் இணைத்திருந்தது.

ஏற்கனவே கொரோனா உயிரிழப்புகளை அரசு மறைத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த பீலா ராஜேஷ், முன்பு அரசு மருத்துவமனைகளில் மட்டும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது.

இப்போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுவதால், இறப்பு எண்ணிக்கை சுகாதாரத் துறைக்கு கிடைப்பதில் தாமதம் ஆகி இருக்கலாம்.

அதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இறப்பு விஷயங்களை அந்த கமிட்டி சேகரிக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த பேட்டி மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது.

ஏனெனில், கொரோனா போன்ற நோய்த் தொற்று பேரிடர் காலத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டியது சுகாதாரத்துறை தான்.

ஆனால், சுகாதாரத் துறைக்கு தெரியாமல் சென்னையில் மட்டும் இத்தனை மரணங்கள் நடந்துள்ளது.

அது குறித்த கேள்விக்கு இனிமேல் அந்த நம்பர்களை கேட்டுப் பெறுவோம் என்று பீலா ராஜேஷ் பதிலளிக்கிறாரே, என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினார்.

சுகாதாரத்துறை செயலாளர் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக முணுமுணுப்பு எழுந்தது. இந்த நிலையில்தான் பீலா ராஜேஷ் இன்று அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அனுபவம் கொண்ட ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் மீண்டும் அப்பொறுப்புக்கே மாற்றப்பட்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே