நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட வனத்துறையில் முதல் முறையாக மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவர் பணியில் சேர்ந்துள்ளார்.
பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான தீப்தியின் தந்தை கடந்த 2007ம் ஆண்டு உயிரிந்தார்.
பி.காம்., பட்டதாரியான தீப்தி தமது தந்தையின் வாரிசு வேலை கேட்டு தமிழக வனத்துறைக்கு விண்ணப்பிருந்தார்.
கடந்த 5 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து முயற்சித்து வந்த நிலையில் தமிழக வனத்துறை பணியில் சேர உத்தரவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தீப்தியின் தந்தை பணிபுரிந்த நீலகிரி வனத்துறையிலேயே அவருக்கு இளநிலை உதவியாளர் பணியும் வழங்கபட்டுள்ளது.
வனத்துறையில் முதல் முதலாக காலடி எடுத்து வைத்துள்ள மூன்றாம் பாலினத்தவரான தீப்திக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.