மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடு வழங்கும் வகையில், தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவக் கல்லூரி சேர்க்கையில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

இதையடுத்து இந்த மசோதா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகள், ஏற்கனவே வெளியான நிலையில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு, ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

இதனால், தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்னும் தொடங்கப்படவில்லை. 

இந்நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடு வழங்கும் வகையில், தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

அவசரத் தேவையின் கருதி அரசியலமைப்புச் சட்டத்தின் 162 பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே