இணையவழிக் குற்றங்களைத் தடுக்கப் போதுமான சட்டங்கள் இல்லை – தலைமை நீதிபதி கருத்து

தொழில்நுட்ப வளர்ச்சிகளால் ஏற்படும் இணையவழிக் குற்றங்களைத் தடுக்கப் போதுமான சட்டங்கள் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தெரிவித்துள்ளார்.

சென்னை SMC கல்லூரியில் நடைபெற்ற அதிகரித்து வரும் பழிவாங்கும் படலம்’ தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கில் பேசிய அவர், ஒரு குற்றத்திற்கான விசாரணை நடைபெறும் போது பாதிக்கப்பட்டோருக்காகத் துடிப்பவர்கள், தண்டனை அறிவிக்கும்போது குற்றவாளிக்காகப் பரிந்து பேசுவதாகத் தெரிவித்தார்.

குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் குற்றவாளிகளை அடையாளம் காட்ட வெளிநாடுகளில் இருப்பதைப் போன்று புதிய முறைகளைக் கையாள வேண்டும் எனத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கேட்டுக்கொண்டார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 409 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே