மத்தியப் பிரதேச மாநிலத்தில் விளையும் அரிய வகை மாம்பழம் ஒன்று 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்கப்படுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தின் கத்தியவாடா என்ற பகுதியில் நூர்ஜகான் என்ற பெயர் கொண்ட அரிய வகை மாம்பழம் விளைகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை பூர்விகமாக கொண்ட இவ்வகை பழம் நாட்டில் இப்பகுதியில் மட்டுமே விளைகிறது.

இவ்வகை மாம்பழம் ஒன்றின் எடை 2 கிலோ முதல் 3.5 கிலோ வரை இருக்கும் என்றும், இதுவே உலகத்தில் எடை மிகுந்த மாம்பழமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இவ்வகை பழங்கள் அதிகளவில் உற்பத்தியாகியுள்ளதாகவும், எனவே நல்ல லாபம் கிடைத்து வருவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இவ்வகை பழங்கள் வேண்டுவோர் முன் கூட்டியே விவசாயிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே