இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,38,716ஆக உயர்வு

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 34,884 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10 லட்சத்து 38 ஆயிரத்து 716 ஆக அதிகரித்தது.

கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 26,273 -ஆக அதிகரித்தது.

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 34,884 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது;

அதே கால அளவில் 671 போ உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 26,273-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நோய்த்தொற்றுக்காக 3,58,692 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,53,751 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,92,589 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,452 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 1,60,907 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,315 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் தில்லியில் 1,20,107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு இதுவரை 3,571 பேர் பலியாகியுள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஜூலை 17- ஆம் தேதி வரை 1,34,33,742 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 3,61,024 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் 10 லட்சம் பேரில் 658 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு: 10,38,716
பலி: 26,273
குணமடைந்தோர்: 6,53,751
சிகிச்சை பெற்று வருவோா்: 3,58,692

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே