இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 லட்சத்தை கடந்தது..!!

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 83 லட்சத்தைக் கடந்து 83 லட்சத்து 13 ஆயிரத்து 876 ஆக அதிகரித்துள்ளது, குணமடைந்தோர் எண்ணிக்கை 76.56 லட்சமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,253 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மீண்டும் 24 மணி நேர பலி எண்ணிக்கை 500-ஐக் கடந்து 514 பேர் மரணிக்க கரோனா பலி எண்ணிக்கை 1,23,611 ஆக அதிகரித்துள்ளது.

மொத்தம் 76 லட்சத்து 56, 478 பேர் குணமடைந்துள்ளனர், இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 92.09% ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து கரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரத்து 787 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 6.42% மட்டுமே.

இந்திஅயவில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்தது அக்டோபர் 11ம் தேதி 70 லட்சத்தைக் கடந்தது. 

அக்டோபர் 29ம் தேதி 80 லட்சத்தைக் கடந்தது.

ஐசிஎம்ஆர் கணக்குளின் படி மொத்தம் 11 கோடியே 29 லட்சத்து 98 ஆயிரத்து 959 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இதில் நேற்று மட்டும் 12 லட்சத்து 9 ஆயிரத்து 609 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு கூறியுள்ளது மத்திய சுகாதார அமைச்சக அறிக்கை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே