பாகிஸ்தான் வரைபடத்தில் காஷ்மீர்; பிரதமர் இம்ரான் கான் வெளியீடு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டார்.

மொத்த ஜம்மு காஷ்மீரும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அந்த பாகிஸ்தான் வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டாகப் பிரிக்கப்பட்டு நாளையும் ஓராண்டு ஆகும் சூழலில் பாகிஸ்தான் இந்த புதிய வரைபடத்தை அறிமுகம் செய்துள்ளது.

வரைபடத்தில்

பாகிஸ்தானின் அரசு தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அந்த வரைபடத்தில், ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது.

அந்த பகுதியின் மேலே, “இந்தியா சட்டத்திற்குப் புறம்பாக ஜம்மு காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது,” என குறிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைபடம் பாகிஸ்தான் மக்களின் அபிலாஷைகளைக் குறிப்பதாக, காணொளி காட்சியில் தோன்றிய இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மக்களின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை ஆதரிப்பதாகவும், இந்திய மேலாதிக்கத்தை மறுப்பதாகவும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சர்ச்சைக்குரிய பகுதியின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சட்ட விரோதமானது என்றும் தெரிவித்தார்.

அமைச்சரவையால், எதிர்க்கட்சிகளால், காஷ்மீர் தலைவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த புதிய வரைபடம் இனி மேல் பாகிஸ்தானில் பயன்படுத்தப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார்.

மகிழ்ச்சி

தான் மகிழ்வாக இருப்பதாகவும், காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதை தொடக்கத்திலிருந்து பாகிஸ்தான் விரும்பியதாகவும் இம்ரான் கான் தெரிவித்தார்.

“இன்ஷா அல்லாஹ், இந்த வரைபடம் முதல் படி, இதனை நிறைவேற்ற அரசியல் ரீதியாக போராடுவோம். எங்களுக்கு ராணுவ நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லை,” என்றார்.

“ஐ.நாவில் அவர்கள் அளித்த உறுதியை, அவர்கள் நிறைவேற்றாமல் போன வாக்குறுதியை மீண்டும் மீண்டும் நினைவூட்டுவோம்.

நான் உயிருடன் இருக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். ஒட்டு மொத்த பாகிஸ்தானும் இதற்காகப் போராடும். ஒரு நாள் நிச்சயம் எங்கள் குறிக்கோளை அடைவோம்,” என்று தனது தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரி என கூறும் ட்விட்டர் பயனர் ஹசன் அப்பாஸ் இந்த புதியவரைப்படம் குறித்து விளக்கினார்.

“பாகிஸ்தான் பிரதமராக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இந்த புதிய அரசியல் வரைபடம், ஏ.ஜெ.கே, ஜிபி, ஜுனகத், சர் க்ரீக், என்ஜெ9842 (சியாசின்) பாகிஸ்தானின் ஒரு பகுதி.

ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் சர்ச்சைக்குரிய ஒரு பகுதி. இதனை ஐநா தீர்மானம் மூலமாகத் தீர்வு காண்போம்,”

சமூக ஊடகத்தில் இதற்கு கலவையான கலவையான கருத்துகள் வந்துள்ளன.

மூத்த பத்திரிகையாளர் தலாத் அஸ்லாம் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “சர்ச்சைக்குரிய பகுதியின் எதிர்காலத்தை வாக்கெடுப்பின் மூலமாக மட்டுமே தீர்மானிக்கும் நமது நீண்ட நாள் நிலைப்பாட்டை நாம் கைவிடுவதை இந்த புதிய வரைபடம் உணர்த்துகிறதா? இதன் தாக்கம் எப்படி இருக்கும்?,” என்று கூறி உள்ளார்.

தலாத்தின் ட்வீட்டிற்கு கருத்து தெரிவித்துள்ள எக்ஸ்பிரஸ் ட்ரிபியூனின் முன்னாள் ஆசிரியர் முகம்மது ஜியாவூதின், “நான்கு மாகாணங்களை மட்டும் அங்கீகரிக்கும் நமது அரசமைப்பு இந்த புதிய வரைபடத்தை ஆதரிக்கிறதா? ஆசாத் காஷ்மீரையும், ஜிபியையும் (இரண்டையும் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்கிறது அரசமைப்பு) பாகிஸ்தானுடன் அரசமைப்பில் மாற்றம் கொண்டு வராமல் இணைத்து விட்டோமா?”

சிலர் இதனை அபத்தமானது என்கிறார்கள்.

கரீத் ஃபகூரிம். ” பாகிஸ்தானின் புதிய வரைபடமாம். ஆனால் காஷ்மீர் (இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்) ஆனால் கடந்து 70 ஆண்டுகளுக்கும் அதிகமாக அது பாகிஸ்தான் வரைபடத்தில்தானே உள்ளது.

புதிதாகப் பேரை மட்டும் குறிப்பிடுவதால் என்ன ஆகிவிடப் போகிறது. யார் இந்த புதிய யோசனையைக் கூறியது?,” என்கிறார்.

ஆபல பாகிஸ்தானியர்கள் இதனை வரவேற்று உள்ளனர்.

ஜுனகரும்,மனவதாரும் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக எப்போது இருந்தது என தெரியவில்லை. இது குறித்துப் படித்திருக்கிறோம். ஆனால் பார்த்ததில்லை. எப்படியாகினும் இதுவொரு குறியீடு என தெரிவித்துள்ளார்.

இந்தியா கூறுவது என்ன?

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் ஆதரிக்கப்படும் பாகிஸ்தானின் பிராந்திய விரிவாக்க வேட்கையைதான் இது காட்டுகிறது என்கிறது இந்திய வெளியுறவு துறை அமைச்சகம்.

இதுவொரு அரசியல் அபத்தம். இந்தியாவின் குஜராத், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளுக்கு உரிமை கோருவது ஏற்று கொள்ளத்தக்கதல்ல.

இதற்கு சட்ட அங்கீகாரமோ அல்லது சர்வதேச நம்பகத்தன்மையோ கிடைக்காது என்கிறார் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே