தமிழகத்தில் நாளை முதல் புதிய இ-பாஸ் நடைமுறை; விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ்..!!

தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய இ பாஸ் நடைமுறை. விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்கும் எளிதாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும் மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் செல்ல இ பாஸ் நடைமுறையில் உள்ளது.

ஆனால் இ பாஸ் பெறுவது என்பது பெரும் போராட்டமாக இருக்கிறது. இ பாஸை முன்வைத்து முறைகேடுகள் நடைபெறுகின்றன என்பதும் புகார்.

இதனால் இ பாஸ் பெறுவதில் தளர்வுகள் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.

விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும் வகையில் தளர்வுகள் அமல்படுத்தப்படுகின்றன.

இ பாஸுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார், குடும்ப அட்டையுடன் செல்போன் எண்ணை பதிவு செய்தால் உடனே இ பாஸ் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே