ரெய்டுக்கு பயந்து வீசி எறியப்பட்ட பணக்கட்டுக்கள்

கொல்கத்தாவில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து, பணக்கட்டுக்களை மாடியில் இருந்து ஒருவர் வீசி எறிந்துள்ளார். சிதறிய ரூபாய் நோட்டுக்களை ஊழியர்கள் பலர் எடுக்கும் வீடியோ வெளியே வைரலாகி வருகிறது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பென்டின்க் சாலையில் ஹாக் மெர்கன்டைல் என்ற தனியாருக்குச் சொந்தமான ஏற்றுமதி – இறக்குமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் 100, 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை 6-வது மாடியில் இருந்து வீசியெறிந்தனர்.

கட்டுக் கட்டாகவும், கொத்துக் கொத்தாகவும் வந்து விழுந்த பணத்தைக் கண்ட பொதுமக்கள் அதனை அள்ளிச் சென்றனர்.

ஆனால் எவ்வளவு பணம் வீசப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

மாடியில் இருந்து பணக்கட்டுகள் வந்து விழுவதும், அதனை மக்களும், கீழ்தளத்தில் பணியில் இருந்த காவலாளிகளும் பொறுக்கி எடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு, வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ அடிப்படையில் பணத்தை வீசி எறிந்தவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே