வங்கிக்கடன் தொடர்பாக ஆர்.பி.ஐ. மீது பழியை போட்டுவிட்டு மத்திய அரசு தப்பித்துக் கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் வங்கிக்கடன்களை திருப்பிச் செலுத்துவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

 வழக்கின் பின்னணி!!

நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன.

எனவே வங்கியில் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கடன் தவணைகளை தாமதமாக கட்டலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் வங்கிக் கடன்  வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கடன் இ.எம்.ஐ செலுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

நீதிபதிகள் காட்டம்!!

மேலும் நீதிபதிகள் தெரிவித்த உத்தரவில், ‘வங்கிக்கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ளது.

வட்டிக்கு வட்டி வசூல் ரிசர்வ் வங்கியின் முடிவு எனக்கூறி மத்திய அரசு தப்பித்துக் கொள்கிறது.

இத்தகைய விவகாரங்களில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். நீங்கள் அறிவித்த பொது முடக்க உத்தரவால் தான் இந்த பிரச்னையை ஏற்பட்டது.

வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு சுயமாக முடிவெடுக்க வேண்டும்.வணிக நலனில் மட்டும் அக்கறை செலுத்தக்கூடாது.

மக்கள் படும் துன்பங்கள் மீதும் மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும். உங்களது பணியை செய்யும் நேரம் இதுவல்ல; தேவையான நிவாரணத்தை வழங்குவதும் அவசியம்.

வங்கிக்கடன் வழக்கில் ஒரு வாரத்தில் தெளிவான விளக்கத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கு மீதான விசாரணை செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே