சூதாட்ட கிளப்பாக மாறிய வீடு – நள்ளிரவில் நடிகர் ஷியாம் அதிரடி கைது

பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய விவகாரத்தில் நடிகர் ஷாம் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார் நடிகர் ஷார்.

இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்றிரவு ஷாம் வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர்களை கால்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து பணம், சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யபட்டன. பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

12 பி, ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே,லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் ஷாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சமூக இடைவெளி இல்லாமல் குடியிருப்பில் உள்ள வீட்டில் கிளப் போன்று பலரும் சூதாட்டம் ஆடியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஷாம் மற்றும் அவரின் நண்பர்கள் கைதாகியது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே