நெல்லையில் ரூ.36.17 கோடி மதிப்பில் புதிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர்..!!

நெல்லை மாவட்டத்தில் முடிவுற்ற மற்றும் புதிய திட்டங்களை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினர். புதிய திட்டங்களை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

தென்மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, முதற்கட்டமாக நேற்று திண்டுகல்லில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். வருவாய்த்துறை, ஊரக மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் கட்டப்பட்ட 8 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டங்களையும் அவர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, நிலக்கோட்டை, கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகங்கள், திருமணிமுத்தாறு வாய்க்காலில் கட்டப்பட்ட தடுப்பணை உள்ளிட்டவற்றையும் திறந்து வைத்த அவர், கொரோனா தடுப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். இந்த நிலையில் இன்று நெல்லை வந்த முதல்வர் ரூ.36.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே