மும்பை பங்குச்சந்தை இன்று 1,102 புள்ளிகளை இழந்தது

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த சில நாட்ளாக ஏற்றம் கண்டுவந்த மும்பை பங்குச்சந்தை இன்று 1000 புள்ளிகளை இழந்தது.

வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,102 புள்ளிகள் சரிந்து 32,436 புள்ளிகளில் வர்த்தகமானது.

இதே போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 357 புள்ளிகள் இழந்து 9,544.புள்ளிகளில் வர்த்தகமானது.

அமெரிக்க மத்திய வங்கி, பொருளாதார மீட்சியில் தாமதம் ஏற்படக் கூடும் என்ற காரணம் ஆசிய பங்குச்சந்தை உள்பட சர்வதேச அளவிலான பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே