மழையும் இளையராஜா இசையும், தோனியின் டிராக்டரும்! சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வீடியோ!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன்காரணமாக பல விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு தவறாமல் நடக்கும் ஐபிஎல் தொடர், இந்தாண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனால் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களின் குடும்பத்தினருடன் வீட்டிலே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நடப்பு கேப்டனான தோனியின் வீடியோ ஒன்றை சென்னை அணி வெளியிட்டுள்ளது.

அதில் அவர் வாங்கிய டிராக்டரை ஒட்டி வருகிறார். மேலும், அந்த விடியோவுக்கு “மெளன ராகம்” திரைப்படத்தில் வரும் இசைப்புயல் இளையராஜாவின் பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. அதில், “தல தோனி இளையராஜாவை சந்திக்கிறார்” என அதில் பதிவிட்டிருந்தனர். தற்பொழுது அந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே