பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 14 போலீசார் படுகாயம்..!! 2 காவலர்கள் உயிரிழப்பு..!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 காவலர்கள் உயிரிழப்பு,14 போலீசார் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்.

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 காவலர்கள் உயிரிழப்பு, 14 போலீசார் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஸ்ரீநகரின் பாந்தாசாவு பகுதியில் போலீஸ் ரோந்து வாகனம் மீது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்த போலீசாரில் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே