சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி!

சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை முதலமைச்சர் வழங்கி இருக்கிறார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை பரிசீலித்த முதலமைச்சர் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை வழங்கி இருக்கிறார்.

அந்த நிபந்தனைகளில்

  • பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த கூடாது என்றும்
  • தடை செய்யப்பட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்றும்
  • உள் அரங்கத்திற்குள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும்
  • 20 பேருக்கும் அதிகமாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும்
  • படப்பிடிப்புக்கு தொடங்குவதற்கு முன்பாக அந்த அரங்கம் மற்றும் படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் வாகனம் உள்ளிட்டவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டுமென்றும்
  • படப்பிடிப்பில் கலந்து கொள்வோர் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும்
  • படப்பிடிப்பில் கலந்து கொள்வோர் அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கை கழுவ வேண்டும் என்றும்
  • சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துவதற்கு முன் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்த வேண்டும்,
  • கண்டிப்பாக பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் இன்றோ அல்லது நாளையோ சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்குவதற்கு பணிகளை தொடங்கி இருக்கிறார்கள்.

எனவே வரும் திங்கள்கிழமை முதல் கரோனாவின் ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பாகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே