SS ராஜமெளலி இயக்கும் RRR திரைப்படத்தின் புதிய தகவல்

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, எஸ்.எஸ். ராஜமெளலி ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது.

முதல்முறையாக ஜூனியர் எடிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள்.

ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள்.

மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – கே.கே. செந்தில் குமார்.

அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.

பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ் போன்றோரும் நடிக்கிறார்கள்.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் ஆர்ஆர்ஆர் படம் 2021 ஜனவரி 8 அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஜூனியர் என்டிஆரின் பிறந்த நாளான மே 20 அன்று ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர் ஏற்று நடிக்கும் வேடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஆர்ஆர்ஆர் படத்தின் பணிகளைத் தொடரமுடியவில்லை.

எனவே மே 20 அன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோ வீடியோவோ வெளியாகாது என ஆர்ஆர்ஆர் படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே