தமிழக அரசின் பட்ஜெட்டை நாளை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
தமிழக அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
நிதித்துறையை கவனித்து வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 9வது முறையாக இதனை தாக்கல் செய்கிறார்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட் என்பதால் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்நிலைகளில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும், புதிய மாவட்டங்கள், தாலுக்காக்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019-20 பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை 14 ஆயிரத்து 315 கோடி ரூபாயாக இருந்தது.
நிதிநிலை பற்றாக்குறையை படிப்படியாக குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் அரசு அறிவித்திருந்தது.
கடன்சுமை 3 புள்ளி 97 லட்சம் கோடி என்றும் அந்த பட்ஜெட்டில் கணக்கிடப்பட்டிருந்தது.