லடாக் பகுதி சாலை விபத்தில் தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு..!!

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி, பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

நேற்று ஆப்பிள் வாகனத்தில் மறைந்திருந்து நகருக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டன. சாலை மார்க்கமான டோல்கேட் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

இதனால் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாலை மார்க்கமாகவும் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் அங்கும் காண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி. இந்திய ராணுவத்தில் சேர்ந்த இவர் நாயக் பொறுப்பில் பணியாற்றி வந்தார்.

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் பணியிலிருந்த போது நடந்த பயங்கர வாகன விபத்தில் கருப்பசாமி வீர மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ராணுவனத்தினர் கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர்.

இதனையறிந்த கருப்பசாமியின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். இத்தகவலை அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும் இரண்டு மகள் உள்ளிட்ட மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ராணுவ வீரர் கருப்பசாமியின் உடலை சொந்த ஊரான கோவில்பட்டிக்கு விரைந்து கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே