இரண்டு கைகளால் ஒரே நேரத்தில் எழுதி மாணவி அசத்தல் சாதனை..!!

எனது இரு கைகளாலும் எழுதி சாதனை படைத்துள்ளேன். இலக்கிய நடவடிக்கைகள், இசை, யக்ஷகானா, வரைதல், மிமிக்ரி, பீட்பாக்ஸிங் உள்ளிட்ட 10 வெவ்வேறு திறமைகளும் என்னிடம் உள்ளன – ஆதி ஸ்வரூபா

கர்நாடகாவில் 16 வயது பெண் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு கைகளையும் பயன்படுத்தி பல்வேறு பாணிகளில் எழுதுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் ஆதி ஸ்வரூபா(16). இவர் ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் எழுதி அசத்தி வருகிறார்.

மேலும், ஒரே நிமிடத்தில் ஒரே நேரத்தில் இரு கைகளாலும் இடமிருந்து வலமாக அதிக எண்ணிக்கையிலான சொற்களை எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.

ஒரு நிமிடத்திற்கு 40 சொற்களை வேகமாக எழுதும் திறன் படைத்துள்ளார் ஆதி ஸ்வரூபா.

மேலும், வலது கை வேகம், இடது கை வேகம், தலைகீழ் இயக்கம், கண்ணாடி படம், ஹீட்டோரோ தலைப்பு, ஹீட்டோரோ மொழியியல், பரிமாற்றம், எதிர் திசை, ஒற்றை திசை, நடனம் மற்றும் குருட்டு மடிப்பு என 11 வெவ்வேறு பாணிகளில் ஸ்வரூபாவால் எழுத முடியும்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது இரு கைகளாலும் எழுதி சாதனை படைத்துள்ளேன்.

இலக்கிய நடவடிக்கைகள், இசை, யக்ஷகானா, வரைதல், மிமிக்ரி, பீட்பாக்ஸிங் உள்ளிட்ட 10 வெவ்வேறு திறமைகளும் என்னிடம் உள்ளன.

எனது 10 வெவ்வேறு திறமைகளுடன் அடுத்த ஆண்டு சாதனை படைக்க திட்டமிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே