ஒருநாள் தலைமையாசிரியரான மாணவி..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரசு பள்ளி மாணவி ஒருவர் ஒருநாள் தலைமையாசிரியராக பணியாற்றி அசத்தினார்.

ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 154 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், காலாண்டு தேர்வில் 447 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவி மதுமிதாயை இன்று ஒரு நாள் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக நியமித்தனர்.

சினிமா படபாணியில் ஒருநாள் முதல்வரை போல ஒருநாள் தலைமை ஆசிரியராக பொறுப்பெற்றார் மதுமிதா.

அவருக்கு ஆசிரியர்கள் சால்வை அணிவித்து கவுரவித்தனர். பின்னர் அனைத்து வகுப்பிற்கும் சென்று மாணவ மாணவிகளின் வருகை பதிவேட்டை மாணவி மதுமிதா ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே