3 நகரங்களில் “இந்த” சேவை நிறுத்தம்; டாடா ஸ்கை திடீர் முடிவு!

டாடா ஸ்கை நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா ஸ்கை பிராட்பேண்ட் இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் இருந்து தனது இருப்பை வாபஸ் பெற்றுள்ளது. “முதல் பான் இந்தியா ட்ரூ ஃபைபர்-டு-ஹோம் (FTTH) பிராட்பேண்ட் உள்கட்டமைப்பை” உருவாக்கும் முனைப்பின் கீழ்இந்நிறுவனம் 20 க்கும் மேற்பட்ட நகரங்களில் தனது சேவைகளை வழங்கியது.

இருப்பினும், டாடா ஸ்கை பிராட்பேண்ட் இப்போது மூன்று முக்கிய நகரங்களில் தனது சேவைகளை திரும்பப் பெற்றுள்ளது. அதாவது டாடா ஸ்கை பிராட்பேண்ட் இப்போது 18 நகரங்களில் மட்டுமே தனது சேவையை வழங்குகிறது.

நிஜமாவே ரூ.8,990 தானா? மிஸ் பண்ணவே கூடாத தரமான பட்ஜெட் போன்!

டாடா ஸ்கை பிராட்பேண்ட் இப்போது அகமதாபாத், ஜோத்பூர் மற்றும் சூரத் ஆகிய நகரங்களிலிருந்து தனது இருப்பை வாபஸ் பெற்றுள்ளது. நிறுவனத்தின் புதிய இணைப்பு பக்கம் மற்றும் திட்டங்கள் தேர்வு பக்கம் உட்பட வலைத்தளத்தின் சில பிரிவுகளில் குறிப்பிட்ட மூன்று நகரங்களானது இனிமேல் முன்னிலைப்படுத்தாது.

பெங்களூரு, சென்னை, காசியாபாத், கிரேட்டர் நொய்டா, குர்கான், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கல்யாண்-டோம்பிவ்லி, கொல்கத்தா, லக்னோ, மீரா பயந்தர், மும்பை ஆகியவை நகரங்களில் மட்டுமே தற்போது டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவைகள் கிடைக்கும் நகரங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

கூடுதலாக, நவி மும்பை, புது தில்லி, நொய்டா, பிம்ப்ரி சின்ச்வாட், புனே மற்றும் தானே ஆகிய நகரங்களில் உள்ள பயனர்களும் டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவைகளைப் பெறலாம். மேற்கூறப்பட்ட பெரும்பாலான நகரங்களிலும் கூட டாடா ஸ்கை நிறுவனம் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே அதன் சேவைகளை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் இந்தியா முழுவதும் நான்கு வரம்பற்ற திட்டங்களையும் நான்கு “Fixed GB” லிமிடெட் திட்டங்களையும் வழங்குகிறது என்பதும், கடந்த மே மாத இறுதியில்,300 எம்.பி.பி.எஸ் அன்லிமிடெட் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் நிறுவனம் தனது திட்டங்களை புதுப்பித்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

டாடா ஸ்கை பிராட்பேண்ட் இந்தியா முழுவதும் நான்கு முக்கிய திட்டங்களை வழங்குகிறது:

முன்னரே குறிப்பிட்டபடி பான்-இந்தியா திட்டங்களை வழங்க இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் டாடா ஸ்கை பிராட்பேண்ட்டும் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான பிராட்பேண்ட் சேவை வழங்குநர்கள் குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் நகரங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட திட்டங்களை வழங்கும்போது, டாடா ஸ்கை பிராட்பேண்ட் நான்கு முக்கிய திட்டங்களை வழங்குகிறது.

டாடா ஸ்கை வரம்பற்ற திட்டங்கள் ஆனது மாதத்திற்கு ரூ.950 முதல் ரூ.1900 வரை நீள்கிறது. அடிப்படை ரூ.950 திட்டம் பயனர்களுக்கு 25 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வேகத்தை வழங்கும். இதற்கிடையில், ரூ.1050 திட்டம், ரூ.1150 திட்டம் மற்றும் ரூ.1900 திட்டம் போன்றவைகள் முறையே 50 எம்.பி.பி.எஸ், 100 எம்.பி.பி.எஸ் மற்றும் 300 எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணைய சேவையை வழங்குகிறது.

இதேபோல், டாடா ஸ்கை பிராட்பேண்ட் நான்கு பெரிய “Fixed GB” திட்டங்களையும் மாதத்திற்கு ரூ.790 முதல் ரூ.1050 வரை வழங்குகிறது. அடிப்படை ரூ.790 திட்டமானது 150 ஜிபி வரையிலான டேட்டாவை 50 எம்.பி.பி.எஸ் வரை என்கிற வேகத்தின் கீழ் வழங்குகிறது.

இதேபோல ரூ.950 திட்டமானது 100 எம்.பி.பி.எஸ் வேகத்தின் கீழ் 250 ஜிபி வரை வழங்குகிறது. ரூ.1000 திட்டமானது 50 எம்.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் 500 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கடைசியாக இதன் ரூ.1050 திட்டமானது 100 எம்.பி.பி.எஸ் வேகத்தின் கீழ் 500 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

டாடா ஸ்கை பிராட்பேண்ட் அனைத்து பயனர்களுக்கும் இலவச ரவுட்டரை வழங்குகிறது, அதே நேரத்தில் “பிக்ஸடு ஜிபி” திட்டங்களில் பயனர்களுக்கு டேட்டாவை மாற்றம் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. கூடுதலாக, மூன்று மாத வரம்பற்ற மற்றும் வரையறுக்கப்பட்ட திட்டங்களை தேர்வு செய்யும் புதிய பயனர்களுக்கு இலவச நிறுவலும் வழங்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே