கிழக்கு கடற்கரை சாலை முதல் மாமல்லபுரம் வரை தானியங்கி வேகக்கட்டுப்பாட்டு அமைப்பை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் சாலை பாதுகாப்பு திட்டங்கள் அர்ப்பணிப்பு விழா, தமிழ்நாடு அரசின் சிறந்த சாலை பாதுகாப்பு நடைமுறை விழிப்புணர்வு விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில், உலக வங்கி உதவியுடன் ரூ.8.60 கோடி மதிப்பில் கிழக்கு கடற்கரை சாலை முதல் மாமல்லபுரம் வரை தானியங்கி வேக கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் நவீன போக்குவரத்து மேலாண்மை அமைப்பை மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தனர்.

இந்த தானியங்கி அமைப்பு சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனத்தின் எண்ணை தானாக படம்பிடிக்கவும், விபத்துகளை கண்டறியவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலை பாதுகாப்பில் சிறந்த விளங்கிய மாவட்டங்களுக்கு விருதுகளை மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினர்.

சாலை பாதுகாப்பில் சேலம் மாவட்டம் முதலிடம் பெற்றது.

இதனையடுத்து முதலிடம் பெற்றதற்காக மாவட்ட ஆட்சியரிடம் விருதுடன் ரூ.25 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இதனைபோல், சாலை பாதுகாப்பில் 2-ம் இடம் பெற்ற தஞ்சை மாவட்டத்திற்கு விருதுடன் ரூ.13 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 3-ம் இடம் பெற்ற திருவள்ளூர் மாவட்டத்திற்கு விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

மேலும், சாலை பாதுகாப்பில் நெல்லை மாவட்டம் சிறந்து விளங்கியதால் அம்மாவட்ட காவல் ஆணையருக்கு விருது வழங்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே