சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தில் இடம்பெற்ற வேற லெவல் சகோ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். டாக்டர் படம் மார்ச் மாதம் 26ம் தேதி வெளியாகவுள்ளது.
இதில் அயலான் படத்தினை ‘இன்று நேற்று நாளை’ படத்தினை இயக்கிய ரவிகுமார் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்தி கேயனுடன் ரகுல் ப்ரீத்தி சிங்,யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இஷா கோபிகர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து டி.முத்துராஜ் இசையமைக்கிறார் .
பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் 2500 கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
இதனை தொடர்ந்து இன்று சிவகார்த்திகேயன் பிறந்த நாளிற்கு அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து இவர் நடித்துள்ளார் அயலான் படத்தில் இடம்பெற்ற “வேற லெவல் சகோ” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.