பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப் செயலி, புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, லட்சக்கணக்கானோர் வாட்ஸ்ஆப்பை புறக்கணித்து டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளுக்கு மாறி வருகிறார்கள்.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் சிக்னல் செயலியை பதிவிறக்கம் செய்ததால், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், கூடுதல் சர்வர்கள் இணைக்கப்பட்டு, திறனை மேம்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வாட்ஸ்ஆப் செயலி, தனது புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் கால அவகாசத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

ஆனால், சிக்னல் செயலியைப் பயன்படுத்தி செல்போன் அல்லது கம்ப்யூட்டர் வாயிலாக  தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியவில்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே