2.0 படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்நிலையில் ஷங்கரின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்குகிறார் ஷங்கர். ராம் சரணின் 15-வது படம் இது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகவலை இயக்குநர் ஷங்கரும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வரும் ராம் சரண், அடுத்ததாக ஷங்கர் படத்தில் நடிப்பது திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஷங்கர் – ராம் சரண் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே