இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.

தமிழரான முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

முரளிதரன் போலவே விஜய் சேதுபதி தோற்றத்தை பொருத்தமாக மாற்றி உள்ளனர்.

இந்தப் படம் பற்றிய தகவல் வெளியான போதே விஜய் சேதுபதி அப்படத்தில் நடிக்கக் கூடாது என எதிர்ப்பு எழுந்தது. அதனால், விஜய் சேதுபதி நடிக்க மாட்டார் என்றே எதிர்பார்த்தார்கள்.

சில தினங்களுக்கு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறவிப்பு வந்தபோது பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விஜய் சேதுபதிக்கு சினிமாவில் நல்ல அடையாளம் தந்த இயக்குனர் சீனுராமசாமி கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு டுவீட் போட்டார்.

இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி, மோஷன் போஸ்டரும் வெளியானதால் இப்போது எதிர்ப்பு அதிகமாகி உள்ளது.

இலங்கை இனப் போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் முரளிதரன் என்ற குற்றச்சாட்டு உண்டு.

மேலும், விஜய் சேதுபதி தன்னை ஒரு தமிழ் உணர்வாளராகக் காட்டிக் கொள்பவர்.

அப்படியிருக்கும் போது அவர் எப்படி இதில் நடிக்க சம்மதித்தார்,

உங்களுக்கு வெட்கமாக இல்லையா விஜய் சேதுபதி என இன்று டுவிட்டரில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதனால் டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங்கில் உள்ளது.

கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் இந்த ஹேஷ்டாக்கை ரீ-டுவீட் செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே