நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் சமக கூட்டணி உறுதியாகியுள்ளதாக நடிகர் சரத்குமார் கூறினார்.

இந்நிலையில், தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கமல்ஹாசன் இதுகுறித்துக் கூறியுள்ளதாவது :

கைகுலுக்கிச் சென்றுவிட்டதால் கூட்டணி அமைந்துவிட்டதாக அர்த்தம் இல்லை.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்துப் பேசி முடிவெடுப்போம். இன்னும் சில கட்சிகள் எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

மேலும் அரசியல் மாற்றத்திற்கு உதவுபவர்களுடன் மட்டும்தான் கூட்டணி வைக்கத்தயாராக உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாருடன் கூட்டணியா ?இல்லையா? என்பது கேள்விக் குறியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே