தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2 முறை தேசிய விருது பெற்ற நடிகர் தனுசுக்கு இந்த படத்தின் மூலம் மூன்றாவது தேசிய விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறிவரும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த படத்தின் மூன்று பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மனதில் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு படக்குழுவினர்களிடம் இருந்து விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகிய இந்தப் படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.