வேட்புமனுத்தாக்கல் செய்த பின் சீமான் பேட்டி..!!

கல்வி, மருத்துவம், தூய்மை, உழவர்களுக்கு தடையில்லா மின்சாரம் போன்றவை எனது ஆட்சியில் இலவசம். வேறு எதையும் நான் இலவசமாக வழங்கமாட்டேன் என சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்த நிலையில், இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ” பணம் இருப்பவர்கள் அரசியல் செய்யலாம் என்ற எண்ணத்தை ஒழிக்க வேண்டும். பண அதிகாரத்தின் வர்க்கத்தை ஒழிக்க நாம் தமிழர் களமிறங்குகிறது. நாம் தமிழர் கட்சி ஆகச்சிறந்த வெற்றியை அமோகமாக பெரும்.

தமிழகத்தின் தலைநகரை (சென்னை) எதிர்காலத்தில் மறந்துவிட வேண்டியது தான். 

கடல், ஏரிகள் என அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்து சென்னை நகரை அரசியல்வாதிகள் கட்டமைத்துள்ளனர். எனது மக்களின் பாதுகாப்பு எனக்கு முக்கியம்.

நாளை நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகும்.

கமல் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாங்கிய பணமே அவர் ஹெலிகாப்டர், விமானம் என்று பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொள்வது. அவர்களிடம் பணம் இருக்கிறது.

அவர்கள் உபயோகம் செய்கிறார்கள். கல்வி, மருத்துவம், தூய்மை, உழவர்களுக்கு தடையில்லா மின்சாரம் போன்றவை எனது ஆட்சியில் இலவசம்.

தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் வீணான இலவசங்கள் தேவையில்லாதது. ஏற்கனவே 6 இலட்சம் கோடி கடனில் தமிழகம் உள்ளது.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற இயலாது ” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே